Published : 18 Jul 2014 09:00 AM
Last Updated : 18 Jul 2014 09:00 AM

தமிழ், சிறுபான்மை மொழி பாடத்துக்கு தலா 50 மதிப்பெண்- காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை

சிறுபான்மை மொழி பேசும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் சிறுபான்மை மொழிப் பாடத்தில் தலா 50 மதிப்பெண் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கே.கோபிநாத் பேசிய தாவது: கட்டாய தமிழ் பாடம் சட்டத்தால் தெலுங்கு உள்ளிட்ட சிறுபான்மை மொழி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூடுதலாக ஒரு பாடத்தை படிக்க வேண்டியுள்ளது. எனவே, சிறுபான்மை மொழி மாணவர் களுக்கு தமிழ் பாடத்துக்கு 50 மதிப்

பெண், சிறுபான்மை மொழி பாடத் துக்கு 50 மதிப்பெண் என ஒதுக்க வேண்டும். நாங்கள் தமிழ் மொழிக்கு விரோதிகள் அல்ல. தமிழ் படிக்க ஆர்வமாக உள்ளோம். 2006-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்து விட்டு, 2011-12 வரை ஆசிரியர் களை நியமிக்காமல் இருந்தால் சிறுபான்மை மாணவர்கள் எப்படி தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி பெற முடியும்?

அமைச்சர் கே.சி.வீரமணி: கட்டாய தமிழ் பாடச் சட்டம் படிப்படி

யாகத்தான் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான ஆசிரியர் கள் அயற்பணி அடிப் படையில் அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட் டுள்ளனர்.

தமிழகத்தில் படிப்பவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகத்தில் கன்னடமும், ஆந்தி ராவில் தெலுங்கும் கண்டிப்பாக படித்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது. ஏற்கெனவே, 10.5 லட்சம் சிறுபான்மை மொழி மாணவ, மாணவிகள் தமிழ் படித்து வருகின்றனர். சுமார் 4 ஆயிரம் பேர் மட்டுமே சிறுபான்மை மொழியை படிக்கின்றனர்.

(தொடர்ந்து அமைச்சருக்கும் காங்கிரஸ் உறுப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.)

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்: கட்டாய தமிழ் பாடச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்த கோரிக்கை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x