Published : 26 Jan 2023 06:10 AM
Last Updated : 26 Jan 2023 06:10 AM

பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அப்போலோவுடன் இணைந்து ஆரம்ப சிகிச்சை: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் பிறவி குறைபாடு நோய் பதிவேடு நிறுவுதல் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான விரிவான பரிசோதனையை வலுப்படுத்துவதற்கான செயல் அமர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கருத்தரங்கில் தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் அப்போலோகுழந்தைகள் மருத்துவமனைக்கு இடையே குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வுகுழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் (பொ) சாந்திமலர், சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் துரைராஜ், யுனிசெஃப் தலைவர் கே.எல்.ராவ், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் முத்துக்குமார், நிவில்சாலமன் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக, பிறவி இதய குறைபாட்டு நோய் பதிவேடு உருவாக்கவும், இளம் சிசு பிறவி இதய குறைபாட்டு நோய் கண்டறிவதை வலுப்படுத்தவும் நவீன உபகரணங்கள் ரூ.22.43கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்என்று 2022-23 மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

மேலும், பிறவி இதய நோயால்பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால இதய அறுவை சிகிச்சைஅளிப்பதற்காக அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து, இதயஅறுவை சிகிச்சைஅளிக்கவும் திருநெல்வேலி, மதுரை, சேலம்,கோவை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இதய மருத்துவக் குழுவினருக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கவும்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று அதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த கருத்தரங்கில் குழந்தைமருத்துவம், இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை உட்பட பல்வேறு துறைகளிலிருந்து 200 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். பிறவி குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிதல், பிறந்த குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விரிவான பரிசோதனை திட்டத்தை உருவாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x