Published : 21 Jan 2023 06:12 AM
Last Updated : 21 Jan 2023 06:12 AM
சிங்கம்புணரி: நான் பள்ளிக்கு ஆய்வுக்குச் செல்லும்போது, அமைச்சர் என்ற முறையில் செல்லாமல் மாணவன் என்ற மனப்பான்மையில் செல்கி றேன் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது பிளஸ் 2 வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர் மாணவிகளிடம் நலம் விசாரித்தார். தேர்வுக்கு முன்னதாகவே, எந்த கல்லூரியில் என்ன பாடப்பிரிவை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட வேண்டும். தேர்வு விடுமுறையில் முடிவு செய்து கொள்ளலாம் என்று இருந்துவிடக் கூடாது என்று அறிவுரை வழங் கினார்.
அதன் பின்பு அப்பள்ளியில் இருந்த புகார் பெட்டியை திறந்து பார்த்தார். அதில் கடிதம் எதுவும் இல்லை. இதையடுத்து, புகார் பெட்டியில் புகார்களை மட்டும் அளிக்க வேண்டும் என்று இருக்காமல் ஆசிரியர்களை பாராட்டியும் கூட கடிதங்களை இடலாம் என மாணவிகளுக்கு அமைச்சர் அறி வுரை வழங்கினார்.
மாநில அளவிலான களிமண் சிற்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி பகவதிக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி பாராட்டினார். ஆய்வின்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் உடன் இருந்தார்.
பின்னர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் மருதிப் பட்டியில் 4-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் அடித்த விவகாரம் சுமூகமாக முடிந்துவிட்டது என்று தெரிவித்தார்.
முன்னதாக, தனியார் பள்ளி விழாவில் பங்கேற்ற அன்பில் மகேஸ் பேசியதாவது: பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது, தலைமை ஆசிரியர்கள் இருக்கையில் ஏன் அமர மறுக் கிறீர்கள் என்று கேட்கின்றனர். நான் பள்ளிக்கு அமைச்சர் என்ற முறையில் செல்லாமல் மாணவன் என்ற மனப்பான்மையில் செல் கிறேன். அதனால் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமருவ தில்லை என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT