Published : 19 Jan 2023 04:27 AM
Last Updated : 19 Jan 2023 04:27 AM
சிவகங்கை: சிங்கப்பூரில் மர்மமான முறையில் இறந்த கணவரின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி சிவகங்கை ஆட்சியரிடம் மனு அளித்தார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே நடராஜபுரம் மும்முடிச்சான்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(34). இவரது மனைவி பிரமிளா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிஷியன் வேலைக்குச் சென்றார். இந்நிலையில் ராஜ்குமார் ஜன.15-ம் தேதி தனது மனைவியிடம் மொபைல் போனில் பேசியுள்ளார்.
அதன் பின்பு ஜன.17-ம் தேதி ராஜ்குமாரை சிங்கப்பூர் அழைத்துச் சென்ற ஏஜென்ட் பாண்டி, பிரமிளாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு ராஜ்குமார் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித் துள்ளார். இந்நிலை யில் நேற்று ஆட்சியர் அலுவலகம் வந்த பிரமிளா, கோரிக்கை மனு அளித்தார்.
அதில், தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்கவும், அவரது உடலை இந்தியா கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அதேபோல், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடமும் மனு அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT