Published : 17 Jan 2023 04:25 AM
Last Updated : 17 Jan 2023 04:25 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பட்டியலின மக்கள் பொங்கல் பண்டிகையை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர், வடக்கு மாதவி, உப்போடை, இந்திராகாந்தி நகர், தேவையூர், மறவநத்தம், மேட்டுச்சேரி, நெய்குப்பை, திருவளாந்துறை அம்பேத்கர் நகர், ராம்ஜி நகர், பசும்பலூர், அகரம், ராயப்பா நகர், நாரணமங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு இயக்கங்கள், ஆதிதிராவிடர் மக்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தவர்களை கைது செய்ய வேண்டும். வேங்கைவயல் மக்களுக்கு பாதுகாப்பும், உரிய நீதியும் வழங்க வேண்டும். சமூக நீதியை நிலைநாட்டுவதில், பட்டியலின மக்கள் பிரச்சினைகளில் அசட்டையாக செயல்படும் போலீஸ் உள்ளிட்ட இதர அரசுத் துறைகளைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT