Published : 15 Jul 2014 12:11 PM
Last Updated : 15 Jul 2014 12:11 PM

தமிழக தொழிலதிபர்கள் கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதாக வதந்தி: பேரவையில் திமுக மீது அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழக தொழிலதிபர்கள் கர்நாடகத் துக்கு போவதாக திமுக வதந்தி பரப்பி வருகிறது என்று தொழில் துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.

பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்துக்குப் பதில் அளித்து அவர் திங்கள்கிழமை பேசியதாவது: ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வேண்டுமானால் சாலை வசதி சரியாக இருக்க வேண்டும். கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள திம்மம் வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் லாரி பழுதடைந்ததால், அந்த சாலையில் 14 மணி நேரத்துக்கு போக்குவரத்தே இல்லாத நிலை ஏற்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்திலிருந்து எந்த முதலீட் டாளரும் கர்நாடகாவுக்கு சென்று முதலீடு செய்ய தயாராக இல்லை என்று பல்வேறு தொழிலதிபர் களும் தெரிவித்ததாக மறுநாளே பத்திரிகைகளில் செய்தி வந்தது.

தவறான கருத்து

ஆனால், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பேரவை உறுப்பினர் ஸ்டாலின் ஆகியோர் தமிழகத்திலிருந்து முதலீட் டாளர்கள் கர்நாடகாவிற்கு சென்றுவிட்டதாக ஒரு தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.

திருப்பூரில் இருந்து ஒருவர் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆலையையும், கோவை யைச் சேர்ந்த ஒருவர் ரூ.ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆலையை யும் கர்நாடகத்தில் தொடங்க விருப்பதாக திமுக தலைவர் கூறியுள்ளார். அப்படியென்றால் அவர்கள் யார்? அந்த நிறுவனத் துக்குப் பெயர் இல்லையா? இவர்கள் ஆதாரம் இல்லாமல் வதந்தி பரப்புகின்றனர்.

மெட்ரோ ரயில் பெட்டி தொழிற்சாலை

கடந்த திமுக ஆட்சியில், சென்னை மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை தயாரிக்கும் அல்ஸ்தாம் தொழிற்சாலை தமிழகத்தில் தொடங்கப்படாமல் ஆந்திர மாநிலம் தடா பகுதிக்கு சென்றுவிட்டது. அங்கு உற்பத்தியாகும் பெட்டிகள்தான் சென்னை மெட்ரோ ரயிலுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

இவர்களது ஆட்சியில்தான் தொழிலதிபர்கள் பிற மாநிலத்துக்கு சென்றார்களே தவிர, அதிமுக ஆட்சியில், எந்த தொழிலதிபர்களும் வெளிமாநி லத்துக்கு செல்ல மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x