Published : 29 Dec 2016 09:35 AM
Last Updated : 29 Dec 2016 09:35 AM

சசிகலாவை சந்தித்தது ஏன்?- தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் விளக்கம்

தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், போயஸ் தோட்டத்தில் வி.கே.சசிகலாவை சந்தித்துப் பேசினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஞானதேசிகன், பிற்பகல் 2 மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு சென்று சசிகலாவை சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய ஞானதேசிகன், ‘‘கடந்த 2001-ல் அதிமுக - தமாகா கூட்டணி ஏற்பட்டதால் மூப்பனாருடன் ஜெய லலிதாவை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சசிகலாவை ஜெயலலிதா அறி முகம் செய்துவைத்தார். அதன் பிறகு பலமுறை சசிகலாவை சந்தித் துப் பேசியிருக்கிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். எனவே, ஜெய லலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அவரது தோழி சசிகலாவை சந்தித்துப் பேசினேன். அவ்வாறு இரங்கல் தெரிவிப்பது தமிழகத்தின் மரபாகும். இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல. எனது தனிப்பட்ட சந்திப்பு’’ என்றார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர் தலின்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அக்கட்சியுடன் இணக்கமான போக்கையே வாசன் கடைபிடித்து வந்தார். ஆனால், கடைசிநேரத்தில் தமாகாவை அதிமுக கைவிட்டது. இதனால் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் நிலைக்கு தமாகா தள்ளப்பட்டது.

அதன்பிறகு திமுகவுடன் நெருக் கம் காட்டிவரும் வாசன், அதிமுகவை அவ்வப்போது விமர் சனம் செய்து வருகிறார். இந்நிலை யில், சசிகலாவை ஞானதேசிகன் சந்தித்திருப்பது தமாகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x