Published : 23 Dec 2016 08:48 AM
Last Updated : 23 Dec 2016 08:48 AM

டெபாசிட் கட்டுப்பாடு திரும்ப பெறப்பட்டும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் செயல்படவில்லை

வரிசையில் நின்று அவதிக்குள்ளான பொதுமக்கள்

ரிசர்வ் வங்கியின் டெபாசிட் கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்ட நிலையில், பணம் செலுத்தும் இயந்திரங்கள் இன்னும் இயக்கப் படவில்லை. அதனால் வங்கியில் பணம் செலுத்த வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப் பட்டதாக மத்திய அரசு அறிவித் ததிலிருந்து, வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவும், வங்கியிலிருந்து பணத்தை எடுக்கவும் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். வாடிக் கையாளருக்கு வழங்கப்படும் தொகை, பல வங்கிகளில் ரூ.4 ஆயிரத்தை தாண்டாததால், பொது மக்கள் பலமுறை வங்கிகள் முன்பு வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இந்நிலையில் வங்கியில் பழைய நோட்டுகளாக ரூ.5 ஆயிரம் மட்டுமே டெபாசிட் செய்யமுடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதைத்தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் இயங்கி வரும் பணம் செலுத்தும் இயந்திரங்களின் செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இதனால் அவற்றின் செயல்பாடுகள் கடந்த 20-ம் தேதி மாலையே நிறுத்தப்பட்டன. தற்போது டெபாசிட் கட்டுப்பாடு உத்தரவை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்ற நிலையில், இயந்திரங்கள் நேற்றும் செயல்படவில்லை. பணம் செலுத்த வந்த பொதுமக்களும், பணம் எடுக்க வந்தவர்களும் வரிசையில் நிறுத்தப்பட்டனர். அதனால் அவர்கள் கடும் அவ திக்குள்ளாயினர்.

இது தொடர்பாக கொடுங்கை யூர் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் டெபாசிட் செய்ய வந்தி ருந்த எஸ்.ராஜேந்திரன் என்பவர் கூறும்போது, “நான் ஒரு நிறுவனத்தில், டிசம்பர் 23-ம் தேதி யிட்ட காசோலையை கொடுத்து விட்டேன். எனது வங்கிக் கணக்கில் தற்போது பணம் இல்லை. அதை செலுத்துவதற்காக வங்கிக்கு வந்தால், பணம் செலுத்தும் இயந்திரம் செயல்படவில்லை. அதனால் வரிசையில் நின்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு முன்பு 100 பேர் உள்ளனர். நான் பணத்தை செலுத்த மாலை 4 மணி ஆகிவிடும் என நினைக் கிறேன். பணம் செலுத்தும் இயந்திரம் இருந்திருந்தால், சில நிமிடங்களில் பணத்தை செலுத்தி விட்டு சென்றிருப்பேன். இன்று பல வேலைகளை முடிக்க வேண்டியிருந்தது. எதையும் செய்யமுடியவில்லை” என்றார்.

அது தொடர்பாக வங்கியின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பணத்தை செலுத்துவதில் கட் டுப்பாடு விதித்தபோதே, மும்பை யிலிருந்தே பணம் செலுத்தும் இயந்திரங்களின் செயல்பாடு முடக் கப்பட்டது. தற்போது கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டதாக ரிசர்வ் வங்கி எங்களுக்கு உத்தரவை அனுப்பியுள்ளது. ஆனால் அதில் பணம் செலுத்தும் இயந்திரங்களை இயக்கலாம் என்பது போன்ற எந்த அம்சமும் இடம்பெறவில்லை. அதனால் பணம் செலுத்தும் இயந்திரங்கள் செயல்படவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x