Published : 30 Dec 2022 04:47 PM
Last Updated : 30 Dec 2022 04:47 PM

சென்னையை குப்பை இல்லாத நகரமாக அறிவிக்க மக்களிடம் ஆட்சேபனை, ஆலோசனை கேட்கும் மாநகராட்சி

சென்னை: சென்னையை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற நகராமாகவும், குப்பை இல்லாத நகரமாகவும் அறிவிக்க பொதுமக்கள் ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற (Open Defecation Free++ (ODF++) ) நகரமாக அறிவிப்பு செய்வது, 200 வார்டுகளும் திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற வார்டுகளாக சான்று பெறுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சியை குப்பை இல்லா மாநகராட்சியாக (Garbage Free City 3 Star) அறிவிப்பு செய்வது தொடர்பாக, 200 வார்டுகளும் குப்பை இல்லா வார்டுகளாக சான்று பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் 15 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை, solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மேற்பார்வை பொறியாளர், திடக்கழிவு மேலாண்மைத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை-600 003 என்ற முகவரியில் கடிதம் மூலமும் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x