Published : 30 Dec 2022 04:07 AM
Last Updated : 30 Dec 2022 04:07 AM
சென்னை: அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புற நோயாளிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும், புற நோயாளிகளுக்கென பிரத்யேக காய்ச்சல் சிகிச்சைப் பிரிவை பொது மருத்துவம் மற்றும் நுரையீரல் மருத்துவத் துறையுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். நோயாளிகளின் உடல் நிலையின் அடிப்படையில் அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். ஆக்சிஜனை தேவைக்கேற்ப இருப்பு வைக்க வேண்டும். அதேபோன்று, ஆக்சிஜன் கட்டமைப்புகளையும், படுக்கைகளையும் தயார் நிலையில் வைத்திருப்பது முக்கியம்.
ஆய்வகங்களுக்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை போதிய எண்ணிக்கையில் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மேலும், மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி இருப்பதை உறுதி செய்வது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT