Published : 30 Dec 2022 04:37 AM
Last Updated : 30 Dec 2022 04:37 AM
கடலூர்: மீன் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மீன்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஒரு சில வியாபாரிகள் ரசாயனம் கலந்த மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது.
இதையடுத்து கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் தலைமையில் மீன்வளத் துறை அதிகாரிகள் காவல் துறையினருடன் இணைந்து நேற்று கடலூர் துறைமுக மீன்மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயனக் கலவை ஏதேனும் பூசப்பட்டுள்ளதா? மீன்கள் தரமாக, சாப்பிடுவதற்கு ஏற்றதாக உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
பின்னர் அதிகாரிகள் கூறுகையில், “கடலூர் துறைமுக மீன்மார்க்கெட்டில் தரமற்ற மீன்கள் மற்றும் ரசாயனம் பூசிய மீன்கள் ஏதும் விற்கப்பட வில்லை” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT