Published : 27 Dec 2022 07:32 AM
Last Updated : 27 Dec 2022 07:32 AM
உடுமலை: மடத்துக்குளம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராகிம் (42). இவர், உடுமலையிலுள்ள உறவினர் திருமணத்துக்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். திருமணம் முடிந்த பின்னர், அவரது குடும்பத்தினர் மட்டும் வேனில் நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சையது இப்ராகிமின் மனைவி ஆசியா பானு (35), மகள் சஸ்மிதா (11), மகன் இஸ்மாயில் (14), தாயார் ரஷீதா பேகம் (55) ஆகியோர் வேனில் இருந்தனர். வேனை நரசிங்காபுரத்தைச் சேர்ந்த முத்து (57) என்பவர் ஓட்டினார். நரசிங்காபுரம் பகுதியில் எதிரே வந்த மினி சரக்கு லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணித்த சிறுவன் இஸ்மாயில் தவிர, மற்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறுவன் இஸ்மாயில், உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மடத்துக்குளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT