Published : 24 Dec 2022 06:56 AM
Last Updated : 24 Dec 2022 06:56 AM
கோவை: மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 27-ம் தேதி கோவை வருகிறார். அன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வரும் ஜே.பி.நட்டா, கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் காரமடைக்கு செல்கிறார். காரமடை வி.பி.ஆர். மஹாலில் கோவை, நீலகிரி மாவட்ட மக்களவைத் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது, மக்களிடையே கட்சிக்கு வரவேற்பு எந்த அளவுக்கு உள்ளது, மக்களவைத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, தொகுதிகளில் பூத் கமிட்டிகளை பலப்படுத்துதல், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வது போன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய மாநில நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT