Published : 21 Dec 2022 04:20 AM
Last Updated : 21 Dec 2022 04:20 AM
புதுச்சேரி: மாநில அந்தஸ்துக்காக மீண்டும் தேர்தல் புறக்கணிப்பு அஸ்திரத்தை வீசுவாரா முதல்வர் ரங்கசாமி என்று கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் அதிக முறையும்,அதிக ஆண்டுகளும் முதல்வர் பதவியை வகித்து வருபவர் ரங்கசாமி. இவர் மாநில அந்தஸ்துக்காகவே தனிக் கட்சியை தொடங்கினார். இவரது கட்சி என்.ஆர். காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டாலும் அக் கட்சிக்கு "நமது ராஜ்ஜியம்" என்றபெயரும் உண்டு. மாநில அந் தஸ்து இருந்தால் மட்டுமே புதுச்சேரியில் ஆட்சி செய்ய முடியும் என்ற கொள்கையும் அவருக்கு உண்டு.
ஆனாலும் இதுவரை மாநிலஅந்தஸ்து கிடைக்கவில்லை. இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் போது ரங்கசாமி தனது தேர்தல் அறிக் கையில் முதலில் குறிப்பிட்டு வாக்குறுதி அளித்தது மாநில அந்தஸ் தைதான்.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ரங்கசாமி அங்கம் வகித்தாலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுவரை மாநிலஅந்தஸ்து பற்றி வாய் திறக்க வில்லை. ரங்கசாமி ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ நேரு சமூகஅமைப்புகளுடன் கலந்து ஆலோ சித்து மாநில அந்தஸ்து தொடர்பாக கூட்டங்களை நடத்தி வருகிறார். மாநில அந்தஸ்துக்காக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தையும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்த வலியுறுத்தியுள்ளார்.
அப்போது மாநில அந்தஸ்து இல்லாததால் பல விஷயங்கள் செய்ய முடியாத நிலையுள்ளதால் மனஉளைச்சல் ஏற்படுவதாக ரங்கசாமி குறிப்பிட்டது பலத்த விவாதத்தை கிளப்பியுள்ளது. மாநில அந்தஸ்துக்காக ரங்க சாமியின் கூட்டணியில் உள்ள பாஜக, அதிமுகவில் ஒரு பிரிவின ரும் குரல் எழுப்பவில்லை. அதே போல் எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸும் ரங்கசாமியை விமர் சிக்கத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக நாடாளுமன் றத்திலேயே, ‘புதுச்சேரிக்கு மாநிலஅந்தஸ்து வழங்க முடியாது’ எனமத்திய அரசு பதில் அளித்துள்ளதையும் வெளிப்படுத்துகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ் தரப்போ, ‘மாநில அந்தஸ்து பெற அனைத்துமுயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம். முதல்வர் தொடர்ந்து முயற்சி எடுக்கிறார்" என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஆளுநர் தமிழிசையோ, "மாநில அந்தஸ்து இருந்தால் என்னென்ன நடக்குமோ அது தற்போதும் நடக்கிறது" என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். கட்சியினர் காரசாரமாக விவாதிக்கும் சூழலில், இதை கவனித்து வரும் புதுச்சேரி மக்கள் தரப்பில் பேசியபோது, "கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரங்கசாமி மாநில அந்தஸ்து பெற ஒரு அறிவிப்பை வெளியிட் டிருந்தார்.
அதாவது, ‘எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது புதுச் சேரிக்கு மாநில அந்தஸ்து பெற சட்டப்பேரவைத் தேர்தலை புறக் கணிக்கத் தயார்- அதற்கு கட்சிகள் தயாரா!’ என்றும் கேட்டிருந்தார். தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்து, ரங்கசாமி முதல்வராகியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்காக பாஜகதனது பணிகளைத் தொடங்கி யுள்ளது.
இச்சூழலில் மீண்டும் தேர்தல் புறக்கணிப்பு அஸ்திரத்தை மாநில அந்தஸ்துக்காக முதல்வர் கையில் எடுப்பாரா? இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவாரா?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT