Published : 01 Dec 2016 12:30 pm

Updated : 02 Dec 2016 08:41 am

 

Published : 01 Dec 2016 12:30 PM
Last Updated : 02 Dec 2016 08:41 AM

மக்கள் கவிஞர் இன்குலாப் சென்னையில் காலமானார்: தலைவர்கள் இரங்கல்; அரசு மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம்

மக்கள் கவிஞர் என அழைக்கப்படும் கவிஞர் இன்குலாப் உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவ மனையில் நேற்று காலமானார். இதற்கிடையே, அவரது உடல் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக் கரையில் இன்குலாப் (75) பிறந் தார். இவரது இயற்பெயர் சாகுல் ஹமீது. தனது பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்து விட்டு, மதுரைத் தியாகராஜர் கல்லூரியில் தமிழ் படித்தார். படிப்பை முடித்த பின்னர் சென்னை ராயப் பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் 35 வருடங்களாக தமிழ் விரிவுரையாளராக பணி யாற்றினார்.


தமிழ் கவிஞர், பேராசிரியர், சொற் பொழிவாளர், நாடக ஆசிரியர் என பன்முகம் கொண்ட இன்குலாப், பொதுவுடைமைச் சிந்தனையால் கவரப்பட்டவர். இவருடைய ‘நாங்க மனுஷங்கடா', கண்மணி ராஜம், மீட்சி, சூரியனைச் சுமப்பவர்கள் போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவையாகும். இலக்கிய பணிகளுக்காக சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இருதய நோய், மூச்சுதிணறலால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அவர், முகப்பேரில் உள்ள தனியார் மருத் துவமனையில் நேற்று காலமானார். இதையடுத்து, அவரது உடல் ஊரப் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. மக்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் இன்று (2-ம் தேதி) வைக்கப்படு கிறது. இவருக்கு மனைவி கமருனிஷா, மகன்கள் செல்வம், இன்குலாப் மற்றும் மகள் ஹானிமா பர்வீன் ஆகியோர் உள்ளனர்.

உடல் தானம்

இது தொடர்பாக ஹானிமா பர்வீன் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக இருதய நோய் மற்றும் மூச்சு திணறலால் அப்பா தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். முகப்பேரில் உள்ள தனியார் மருத் துவமனையில் அவர் காலமானார். கடவுள், மதம் நம்பிக்கை இல்லாமல் இருந்தார். உடல்நிலை சரியில்லாத தால் உடல் உறுப்புகள் தானம் செய்ய முடியாது. எனவே, உடலை மருத்துவ கல்லூரிக்குத் தானமாக கொடுக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார். அவரின் விருப்பத்தின்படி, அவரின் உடல் வரும் 3-ம் தேதி செங் கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்கவுள்ளாம்’’ என்றார்.

கவிஞர் இன்குலாப் இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலை வர்கள் இரங்கல் தெரிவித் துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் (திமுக பொரு ளாளர்):

கவிஞர் இன்குலாப் இறந்தார் என்ற செய்தி கேட்டு வேத னையும், அதிர்ச்சியும் அடைந்தேன். சிறுபான்மை சமுதாயத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காக தொடர்ந்து குரல் கொடுத்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்):

கவிஞர் இன்குலாப் தமது வாழ் வின் இறுதிநிமிடம் வரை தமிழ் பணிக் காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது மறைவு தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்):

திராவிட இயக்க உணர் வும், மார்க்சிய சிந்தனையும் இணைந்த புரட்சிகர இலட்சியவாதி யான மக்கள் கவிஞர் இன்குலாப் இறப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

இரா.முத்தரசன் (இந்தியக் கம் யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்):

பகுத்தறிவு சிந்தனையும் அறிவியல் கருத்துக்களையும் அடிப்படையாக கொண்டு சமூக மாற்றத்திற்கான கவிதைகளாக படைத்தவர் கவிஞர் இன்குலாப். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய லாளர்):

தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் எவ்வித சமரசத் துக்கும் இடம் தராமல் உழைக்கும் மக்களின் வாழ்க்கை சார்ந்தே படைத்தவர் கவிஞர் இன்குலாப். அவருடைய இறப்பு முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கு பேரிழப் பாகும்.

கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்):

கவிதைப் படைப்பில் தனக் கென தனி முத்திரைப் பாதையை வகுத்துக் கொண்டவர். இஸ்லாமி யக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மதங்களைத் தாண்டி ‘மனிதம்’ என்பதற்கு மரியாதை கொடுத் தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறு தலைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்):

தமிழ்நாட்டில் இளை ஞர்களை ஈர்த்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர். தலித் மக்களின் விடுதலைக்காக அவர் இலக்கியத்தின் வழி பங் களிப்புச் செய்ததுபோலவே பெண் களின் விடுதலைக்கும் பெரும் பங்காற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிஞர் வைரமுத்து:

இன்குலாப் என்ற கவிஞனின் பெளதிக உடல் மறைந்துவிட்டது. தான் நம் பிய தத்துவத்தோடு சமரசம் செய்து கொள்ளாத கவிஞன், வாழ்வோடு சமரசம் செய்துகொள்ளாமல் சாவைத் தழுவியிருக்கிறார். எந்த மழைக்காலமும் அந்தப் புரட்சித் தீயை அணைத்துவிட முடியாது.

விருதுகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத கவிஞன், என் பிறந்த நாளில் வழங்கப்பட்ட கவிஞர்கள் திருநாள் விருதை மட்டும் பெற்றுக் கொண்டு என்னைப் பெருமைப் படுத்தினார். அவர் கவிதைகள் மரணத்தின் விரல்களால் தொடமுடி யாதவை. இன்குலாப் மரணத்தை வென்ற கவிஞன்.

மழையோடு சேர்ந்து அழு கின்றன என்னிரண்டு கண்ணீர்த் துளிகளும். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


முற்போக்கு கவிஞர் இன்குலாப் காலமானார்இன்குலாப் மறைவு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x