இருக்கையில் அமர வைத்த துரைமுருகன்: அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சராகப் பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சராகப் பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: உதயநிதி ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மூத்த அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.14) தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் வந்த அவர், தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அறையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவரை மூத்த அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in