Last Updated : 27 Dec, 2016 10:03 AM

 

Published : 27 Dec 2016 10:03 AM
Last Updated : 27 Dec 2016 10:03 AM

சைக்கிள் ரிக்‌ஷா உரிமம் புதுப்பிக்க 25 பைசா மட்டுமே: 1979-ம் ஆண்டு சட்டம் இன்னும் மாற்றப்படவில்லை

சைக்கிள் ரிக்‌ஷாக்களின் உரிமத்தை புதுப்பிக்க 25 பைசா மட்டுமே கட்டண மாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

1850-ம் ஆண்டில் மனிதர்களை ரிக்‌ஷாவில் உட்கார வைத்து கைகளால் இழுத்துச் செல்லும் ‘கைவண்டி’ இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் 1969-ம் ஆண்டு கைவண்டிக்கு தடை விதிக் கப்பட்டு, கைவண்டி வைத்திருந்த அனைவருக்கும் சைக்கிள் ரிக்‌ஷா வழங்கப்பட்டது. மோட்டார் வாக னங்கள் பிரபலமான பின்னரும் சைக்கிள் ரிக்‌ஷாவின் பயன்பாடு இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

சென்னையில் சென்ட்ரல், பாரி முனை மற்றும் வடசென்னையில் அதிகமான சைக்கிள் ரிக்‌ஷாக் களை பார்க்க முடியும். இந்த சைக் கிள் ரிக்‌ஷாக்களுக்கு உரிமம் வழங் கவும், உரிமத்தை புதுப்பிக்கவும் சென்னை வேப்பேரி காவல் நிலைய வளாகத்தில் தனியாக ஓர் அலுவலகம் உள்ளது. காவல் ஆய்வாளர் உமா வாணி, உதவி ஆய்வாளர் காசி பாண்டியன் ஆகியோர் இந்தப் பணிகளை செய்து வருகின்றனர்.

சென்னையில் தற்போது 1,305 சைக்கிள் ரிக்‌ஷாக்கள் உள்ளன. இவற்றை ஆண்டுக்கு ஒருமுறை வேப்பேரிக்கு கொண்டுவந்து அதி காரிகளிடம் காண்பித்து உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக 25 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி முருகனிடம்(60) கேட்ட போது, "ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் உரி மம் பெற வேண்டும் என்கிற சட்டம் 1979-ம் ஆண்டு கொண்டுவரப்பட் டது. அப்போது இதை எதிர்த்து நாங்கள் போராட்டம், ஊர்வலம் நடத்தினோம். ஆனால் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அப்போது சென்னை முழுவதும் சுமார் 10 ஆயிரம் ரிக்‌ஷாக்கள் இருக்கும். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆட்சியாளர்களும் இந்த கட்டணத்தை மாற்றவில்லை. 25 பைசா இப்போது செல்லாத காசாக மாறிவிட்ட பின்னரும் அந்த தொகை மாற்றப்படவில்லை. இதனால் நாங்கள் ஒரு ரூபாய் நாணயத்தை கொடுப்போம்.

மழையில் நாங்கள் படும் கஷ் டத்தை பார்த்து எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ‘ரெயின் கோட்’ இலவச மாக வழங்கினார். எம்.ஜி.ஆர். ‘ரிக்‌ஷாக்காரன்’ என்ற படத்தில் நடித்தபோது எங்களின் கஷ்டத்தை உணர்ந்து எங்களுக்கு இலவசமாக காலணிகளை வாங்கிக் கொடுத் தார். அதைத் தொடர்ந்து அவரது ரசிகர்களும் எங்களுக்கு உதவி செய்தார்கள்" என்றார்.

காவல் ஆய்வாளர் உமா வாணி கூறும்போது, "உரிமத்தை புதுப் பிக்க வரும் ரிக்‌ஷாக்களை முழு வதுமாக பரிசோதனை செய்வோம். சக்கரங்கள் வலுவாக உள்ளனவா, இருக்கைகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை பார்த்து ரிக்‌ஷாவில் 3 இடங்களில் ‘சீல்’ வைப்போம்" என்றார்.

சைக்கிள் ரிக்‌ஷாவில் மோட்டார் கிடையாது என்பதால் இதற்கு உரி மம் பெறுவதற்கு வட்டார போக்கு வரத்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இன் றைய போக்குவரத்துக்கு பயன் படும் அனைத்து வாகனங்களும் புகை மற்றும் வெப்பத்தை வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துபவை. சைக்கிள் ரிக்‌ஷாவில் செல்வதால் கூடுதல் நேரம் செலவாகுமே தவிர, சிறிதளவும் கூட சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x