Published : 08 Dec 2022 06:10 AM
Last Updated : 08 Dec 2022 06:10 AM
சிவகங்கை: சிவகங்கையில் கடை ஆக்கிர மிப்பை அகற்றிய பெண் நகர மைப்பு அலுவலரை திமுக பிரமுகர் மிரட்டிய சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு, வடை கடையில் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையர் (பொ) பாண்டீஸ்வரி தலைமையில் நகரமைப்பு அலுவலர் திலகவதி உள்ளிட்டோர் பேருந்து நிலையம் முன்பாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று அகற்றினர்.
அப்போது திமுக பிரமுகர் சுந்தரபாண்டியன் என்பவரது கடையில் இருந்த பொருட்களை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியன் நகரமைப்பு அலுவலர் திலகவதியை மிரட்டினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இச்சம்பவம் குறித்து சிவகங்கை டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT