Published : 19 Dec 2016 09:14 AM
Last Updated : 19 Dec 2016 09:14 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் வார்தா புயலால் கடுமையாக பாதிக் கப்பட்ட பகுதிகளில் தொற்று நோயைத் தடுக்க 400 பயிற்சி செவிலியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வார்தா புயல் பாதிக்கப்பட்ட பழ வேற்காடு, மீஞ்சூர், பொன் னேரி, திருவொற்றியூர், கும்மிடிப் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இப்பகுதி களில், தொற்று நோய் பரவாமல் இருக்க, சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
46 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 14 நடமாடும் குளோரி னேஷன் குழுக்கள், 15 புகைத் தெளிப்பான்களுடன் கூடிய பூச்சி யியல் வல்லுநர் குழுக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாவட்டத்தில் 15 இடங்களில் தற் காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு குடிநீர் லாரி களில் குளோரினேஷன் செய்யப் படுகிறது. இந்நிலையில், தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக் கும் வகையில் வகையில், பயிற்சி செவிலியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று தொடங் கியது. 8 தனியார் செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 400 பயிற்சி செவிலியர்கள், பல்வேறு குழுக்களாக பிரிந்து, பழவேற் காடு, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்பு ணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை அருந்த வேண்டும், சோப்பு போட்டு கைகளை தூய்மைப் படுத்த வேண்டும், காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், மருத்துவ முகாம் மற்றும் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என அவர்கள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வரும் 22-ம் தேதி வரை நடைபெறும். உள்ள இந்த ஒவ்வொரு பயிற்சி செவிலியரும், ஒரு நாளில் 50 முதல் 100 வீடுகளுக்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT