Published : 13 Nov 2016 10:28 AM
Last Updated : 13 Nov 2016 10:28 AM

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முறையாக பராமரிக்கப்படாத கழிப்பறைகள்: உங்கள் குரலில் வாசகர் புகார்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் ரூ.103 கோடி செலவில் ஆசியா விலே மிகப்பெரிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, 2002-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங் களுக்கு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக் கும் தினமும் 2 ஆயிரம் பேருந் துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிக்க நாள்தோறும் லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.

அனைத்து வசதிகளும் கொண்ட இப்பிரமாண்டமான பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக சென்னை பெரிய மேட்டைச் சேர்ந்த வாசகர் ஒருவர் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு போய் பார்த்தபோது கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதை காண முடிந்தது. பல கழிப்பறைகளின் கதவில் தாழ்ப் பாள் இல்லாமலும், சில கழிப்பறை களின் கதவுகள் உடைந்தும் இருந்தன. முறையாக சுத்தம் செய் யப்படாததால் துர்நாற்றமும் வீசியது.

இதுகுறித்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த சிவக்குமார் என்ற பயணி கூறும் போது, “இங்குள்ள ஆண்கள் கழிப்ப றைக்குள் போகவே முடியாதவாறு துர்நாற்றம் வீசுகிறது. முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டுதான் செல்லவேண்டி உள்ளது. ஒருமணி நேரத்துக்கு ஒருமுறையாவது இதைச் சுத்தம் செய்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

மணலியைச் சேர்ந்த சுமதி கூறும்போது, “பெண்கள் கழிப்ப றைகள் படுமோசமாக இருக் கின்றன. இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றால் துர்நாற்றத்தால் பெரிதும் அவதிப்படுகிறோம்” என்கிறார்

இப்பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதியில் உள்ள கழிப்பறை அருகே தெற்கு ரயில்வே கணினி முன்பதிவு மையம் அமைந்துள்ளது. அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கூறும்போது, “கழிப்பறை யில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் இங்கு பணி செய்ய சிரமமாக இருக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்படி சிஎம்டிஏ மற்றும் ரயில்வே அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.

இதுதொடர்பாக சென்னை புறநகர் பேருந்து நிலைய உதவி செயற்பொறியாளர் தணிகையரசு கூறும்போது, “இங்கு 19 இடங்களில் கழிப்பறைகள் உள்ளன. அவற்றை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்கிறோம். கழிப்பறையை பயன்படுத்தும் சிலர் தவறாகப் பயன்படுத்தி உடைத்துப் போட்டுவிடுகிறார்கள். இங்கு வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் இதுபோன்ற பிரச்சினை எழுகிறது. இருப்பினும் கழிப்பறையில் கதவு உடைந்திருப்பது போன்ற புகார்கள் வரும்போது உடனுக்குடன் அதனை சரி செய்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x