Published : 12 Nov 2022 06:24 AM
Last Updated : 12 Nov 2022 06:24 AM

இந்தியன் வங்கி - ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘கண்காணிப்பு விழிப்புணர்வு 2022’ நிகழ்வு: ஊழலற்ற தேசமாக இந்தியா வளர அனைவரும் உறுதியேற்க வேண்டும்

ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்ற மேனாள் நீதிபதி அ.முகமது ஜியாவுதீன், சுனீல் அனந்த நாராயணன், சுனில் அரோரா.

சென்னை: இந்தியன் வங்கி - ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2022'(அக். 31 - நவ. 6) முன்னிட்டு, ‘ஊழலற்ற இந்தியாவே வளர்ந்த தேசம்’எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியம், விநாடி - வினாபோட்டி, ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியை நடத்தின. மேலும், ஆன்லைன் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விருந்தினர்கள் பேசியதாவது: மேனாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதீன்: ஒரு நாட்டின் வளர்ச்சியை ஊழல் தடுக்கிறது. ஒருவருக்கு கிடைக்க வேண்டிய ஒரு பொருள் தாமதமாகும்போது ஊழல் ஏற்படுகிறது. ஊழலைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அரசுத்துறை நிறுவனங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலமாக இன்றைக்கு தகவல்களைக் கேட்டு பெறும் நிலை உருவாகியுள்ளது.

நாட்டின் வளர்ச்சித் தடை: காலனியாதிக்கத்திலிருந்து நமக்குப் பிறகு விடுதலை பெற்ற நாடுகள் கூட இன்று வளர்ந்த நாடாகியுள்ளன. ஆனால் நம் நாட்டின் வளர்ச்சி ஊழலால் தடைபட்டு நிற்கிறது. சுயநலம் இல்லாத போக்கும்,நுகர்வு வெறியும் இல்லாத மனமும்நமக்கு வேண்டும். சின்ன விஷயங்கள் தொடங்கி, பெரிய விஷயங்கள் வரை ஊழல் என்பது பார்த்தீனியம் செடி போல் பரவியிருக்கிறது. லஞ்சம் வாங்குவது குற்றம், கொடுப்பதும் குற்றம் எனும் மனநிலைக்கு அனைவரும் வந்துவிட்டால் ஊழல் முற்றாக ஒழிந்துவிடும்.

நாட்டின் வளர்ச்சித் தடை: காலனியாதிக்கத்திலிருந்து நமக்குப் பிறகு விடுதலை பெற்ற நாடுகள் கூட இன்று வளர்ந்த நாடாகியுள்ளன. ஆனால் நம் நாட்டின் வளர்ச்சி ஊழலால் தடைபட்டு நிற்கிறது. சுயநலம் இல்லாத போக்கும், நுகர்வு வெறியும் இல்லாத மனமும் நமக்கு வேண்டும். சின்ன விஷயங்கள் தொடங்கி, பெரிய விஷயங்கள் வரை ஊழல் என்பது பார்த்தீனியம் செடி போல் பரவியிருக்கிறது. லஞ்சம் வாங்குவது குற்றம், கொடுப்பதும் குற்றம் எனும் மனநிலைக்கு அனைவரும் வந்துவிட்டால் ஊழல் முற்றாக ஒழிந்துவிடும்.

எஸ்கேஆர் & கம்பெனி எல்எல்பி நிறுவனர் பங்குதாரர் சுனீல் அனந்த நாராயணன்: சைபர் செக்யூரிட்டி என்பது கணினி அமைப்புகள், நெட்வொர்க்குகள், சாதனங்கள் மற்றும் நிரல்களை எந்த வகையான இணையத் தாக்குதலிலிருந்தும் பாதுகாக்கும் செயல்முறையாகும். ஹேக்கர்கள் உங்கள் கடவுச் சொற்களைத் திருடுவதன் மூலமோ, உங்கள் வங்கி அல்லது கிரெடிட் கார்டு விவரங்களை அணுகுவதன் மூலமோ, உங்கள் தகவலை மீட்கும் வகையில் வைத்திருப்பதன் மூலமோ அல்லது உங்கள் தரவை மற்ற ஹேக்கர்களுக்கு அல்லது இருண்ட வலையில் விற்பதன் மூலமோ பணம் சம்பாதிக்க முடியும். 2011-ம் ஆண்டு ஆக. 26 முதல் 2021 பிப். 20 வரை பதிவு செய்யப்பட்ட ஏர் இந்தியாவின் 45 லட்சம் பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடிவிட்டனர். இந்தியாவில் Ransomware தாக்குதல்கள் 120 சதவீதம் அதிகரித்துள்ளன.

சைபர் தாக்குதல்கள்: மின் உற்பத்தி நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு விற்பனையாளர்கள், உணவகச் சங்கிலிகள் மற்றும் கண்டறியும் ஆய்வகங்கள் கூட சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பொது தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் கிரெடிட் கார்டு எண்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை தனிப்பட்ட அல்லது முக்கியமான தகவல்களை இடுகையிட வேண்டாம்.

தலைமை விஜிலென்ஸ் அதிகாரி சுனில் அரோரா: ஊழல் ஒழிப்பு வாரம் என்பது சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் மக்களுக்கு ஊழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டு, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் வங்கிகளும் கடைபிடித்து வருகின்றன. பொருளாதாரத்திலும் நாம் இன்று 5-வது இடத்தில் இருக்கிறோம். இன்னும் சிறிது காலத்தில் 3-ம் இடத்தை எட்டவுள்ளோம். ஆகையால் இனி நாம் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடு என்ற பேச்சுக்கு இடமில்லை. இன்றைக்கு ஊழல் நமது வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் செயல்பாடுகளை மக்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் வலைதளத்தில் வெளியிடுகின்றன. ஆகையால் ஊழலின் அளவு குறைந்துள்ளது. வங்கிகளைப் பொறுத்தவரை இன்று அனைத்துமே கணினிமயமாக்கப்பட்டு ஒளிவு மறைவின்றி செயலாற்றி வருகிறது. கணினி மயமாக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதன் பயனை எளிதில் அடைந்து வருகின்றனர். இங்கு ஊழலுக்கு வாய்ப்பு குறைவு. ஊழல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாங்கள் பல்வேறு வடிவங்களில் மக்களிடம் ஊழல் ஒழிப்பை பற்றி எடுத்து சொல்கிறோம். இவ்வாறு அவர்கள் பேசினர். முன்னதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வைக் காண தவற விட்டவர்கள் https://www.htamil.org/01234 என்ற லிங்க்கை காணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x