Published : 01 Nov 2022 06:48 PM
Last Updated : 01 Nov 2022 06:48 PM

சென்னையில் 2 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேக்கம்: புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை | கோப்புப் படம்

சென்னை : சென்னையில் 2 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தால் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மழைநீர் தேக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வரை வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்: சென்னையிலிருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பில் இருந்து திருப்பி விடப்பட்டு, காந்தி நகர் ரவுண்டானா வழியாக பேசின்பிரிட்ஜ் பாலாத்தின் மேலே சென்று வியாசர்பாடி சுரங்கம்பாதை வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புளியந்தோப்பிலிருந்து சென்னையை நோக்கி கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்களை அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு, பெரம்பூர் மேம்பாலம் வழியாக ஜமாலியா ரோடு, ஓட்டேரி, அயனாவரம் செல்வதற்கு வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதின் உள்ளே அனுமதிக்கப்படாமல் இரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்: சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளை சென்னையிலிருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஸ்டராகான்ஸ் சாலை சந்திப்பில் இருந்து திருப்பி விடப்பட்டு, ஓட்டேரி வழியாக பெரம்பூர் மார்கமாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளை புளியந்தோப்பிலிருந்து சென்னையை நோக்கி கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்களை அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு, பெரம்பூர் மேம்பாலம் வழியாக ஜமாலியா ரோடு, ஓட்டேரி, அயனாவரம் செல்வதற்கு வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x