Published : 01 Nov 2022 07:22 AM
Last Updated : 01 Nov 2022 07:22 AM

நேர்மையாக செயல்படும் ஆளுநரை விமர்சிப்பதா? - திமுக கூட்டணி கட்சிகளுக்கு தேவநாதன் யாதவ் கண்டனம்

சென்னை: திமுகவின் கொள்கைகளை ஏற்காமல் நேர்மையாகச் செயல்படும் ஆளுநரை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்று இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தி.தேவநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜக ஆட்சி அமைந்த பின், ஆளுநர்கள் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டியும், கண்டித்தும் நேர்மையான முறையில் நடந்துகொள்கின்றனர். இதுபல கட்சிகளின் கண்களை உறுத்துகிறது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பின், நமது பாரம்பரியம், கலாச்சாரம், தொன்மையை மீட்டு வருகிறார். ஆளுநரின் கருத்துகள் அனைத்தும் ஆபத்தானவை, அபத்தமானவை என திமுக கூட்டணிக் கட்சிகள் அவரை விமர்சித்துள்ளனர்.

ஆளுநரின் கருத்துகளை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் விருப்பம். ஆளுநர் என்பவர் ஆளும் கட்சியின் கொள்கைகளை ஏற்கவேண்டும் என்பது விதியல்ல. ஆளுநர் சட்டத்துக்கு உட்பட்டேசெயல்படுகிறார். திமுகவின்கொள்கைகளை ஏற்காமல்நேர்மையாகச் செயல்படுகிறார் என்பதற்காக ஆளுநரை கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் தன் பணியைச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். மதச்சார்பற்ற கூட்டணி எனகூறிக் கொண்டு இந்து மதத்தைப் புண்படுத்தி மற்ற மதங்களை வளர்க்கும் நீங்கள், திமுகவின் நிரந்தர நண்பர்கள் இல்லை. நாளை காலம் மாறலாம்; கூட்டணிகளும் மாறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x