Published : 26 Oct 2022 06:48 AM
Last Updated : 26 Oct 2022 06:48 AM

துணை ராணுவத்தினர் கோவையில் குவிப்பு

கோவை உக்கடத்தில் துணை ராணுவப் படையினருடன் இணைந்து சோதனை நடத்தும் காவல்துறையினர்.

கோவை: கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தையொட்டி ஏற்பட்டுள்ள பதற்றத்தால், கோவையை துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்னண் ஆகியோரது மேற்பார்வையின் கீழ், மாநகரகாவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் மாநகர் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரின் வழக்கமான சோதனைச் சாவடிகள் மட்டுமின்றி 25-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்தும் போலீஸார் கண்காணித்து வரு கின்றனர்.

அவர்களுக்கு உதவியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்), அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்) ஆகியோரும் நூற்றுக்கணக்கானோர் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் துப்பாக்கியுடன் உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பதற்றமான இடங்களில் கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மாவட்டப் பகுதியில் பதற்றமான இடங்களிலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களின் முன்பும் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x