Last Updated : 16 Oct, 2022 05:38 PM

1  

Published : 16 Oct 2022 05:38 PM
Last Updated : 16 Oct 2022 05:38 PM

ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

விழாவில் உரையாற்றும் அமைச்சர் எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி: ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு உள்ள ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி, எனவே, அறநிலையத்துறை மூலம் அந்தந்த கிராமப் பகுதியிலுள்ள கோயில்கள் சீரமைப்பு செய்திட வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆவின் பால் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மேலும் இயக்குனர்கள் என மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பதவியேற்பு விழா கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், எவர் வீடு கட்டினாலும், பால் காய்ச்சி அதன் பின் தான் குடியேறுவது தமிழர்களின் மரபாக இருந்து வருகிறது. வேளாண்மை தொழில்களுக்கு இன்றியமையாதது கால்நடைகள் ஆகும் கால்நடை வளர்ப்பில் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்ட கூடியது பால் உற்பத்தி. எனவே பால் உற்பத்தியில் மற்ற மாவட்டங்களை விட சிறப்பான உற்பத்தியில் முதலிடம் பெரும் வகையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர் பெரும் பங்காற்றிட வேண்டும் என்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நாளொன்றுக்கு 1 லட்சத்து 73 ஆயிரம் லிட்டர் பாலினை 23,028 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 38 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து, பால் குளிரூட்டும் நிலையம் மூலமாகவும் 17 தொகுப்பு பால் குளிர்விக்கும் மையம் மூலவாகவும் குளிரூட்டப்பட்டு பதப்படுத்தி விற்பனைக்காக 3,000 லிட்டர் உள்ளூர் விற்பனை போக மீதமுள்ள பால் இணையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை 18 முகவர்கள் மூலமாக செயல்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான அனைத்து வளர்ச்சி பணிகளும் முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சித் தலைவர் பெருந்திட்ட வளாகம் விரைவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.இந்த மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களும், ஆட்சியரும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை, இந்து சமய அறநிலைத்துறை தற்பொழுது பால்வளத்துறை உள்ளீட்டதுறை அலுவலகங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது

நான் அமைச்சர் பதவியேற்ற உடனேயே முதலில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, அறநிலையத் துறையை பிரித்து, இம்மாவட்டத்திற்கு கொண்டு வந்தேன். ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு கொண்டிருப்பதால் தான், அறநிலையத்துறை மூலம் அந்தந்த கிராமப் பகுதியிலுள்ள கோயில்கள் புனரமைக்கப்பட்டு சீர் செய்யப்பட்டு வருகின்றன. இந்த திராடவிட மாடல் ஆட்சியும் ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு உள்ள ஆட்சி தான் என பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பெ.புவனேஸ்வரி, கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் ரா.சுப்ராயலு, துணைப்பதிவாளர் (பால்வளம்) கோ.நாகராஜ் சிவக்குமார் அனைத்து ஒன்றிய குழு பெருந்தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x