Published : 01 Nov 2016 10:57 AM
Last Updated : 01 Nov 2016 10:57 AM

இறந்தவர்களை நினைவுகூரும் கல்லறை திருநாள்: நாளை அனுசரிக்கப்படுகிறது

இறந்தவர்களை நினைவுகூரும் கல்லறை திருநாள் நாளை (புதன் கிழமை) அனுசரிக்கப்படு கிறது. இதையொட்டி, கல்லறை தோட்டங்களில் சிறப்பு திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடைபெறும்.

இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். இது அனைத்து ஆன்மாக்கள் தினம் என்றும் அழைக்கப்படு கிறது. கல்லறை திருநாள் அன்று கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று இறந்த தங்கள் உறவினர்களின் கல்லறையில் அவர்களின் ஆன்மா இளைப்பாற ஜெபம் செய்வது வழக்கம். மேலும், கல்லறை தோட்டத்தில் திருப்பலி யும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும்.

அதன்படி கல்லறை திருநாள் நாளை (புதன்கிழமை) அனுசரிக் கப்படுகிறது. கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று தங்கள் உறவினர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி அவற்றுக்கு வண்ணம் பூசுவார் கள். அந்த வகையில் சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள புனித பேட்ரிக் கல்லறை தோட்டம், செயின்ட் மேரீஸ் கல்லறை தோட்டம், காசிமேடு கல்லறை தோட்டம், கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம், சாந்தோம் கியூபிள் ஐலேண்ட் கல்லறை தோட்டம் உள்ளிட்டவற்றில் நேற்று ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களின் கல்லறை களைச் சுத்தப்படுத்தி, வெள்ளை அடித்து வண்ணம் பூசினர்.

சென்ட்ரல் எதிரே உள்ள செயின்ட் பேட்ரிக் கல்லறை தோட்டத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த மனேஷ் என்ற பெரியவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன தனது 3 குழந்தைகளின் கல்லறைகளைச் சுத்தப்படுத்தி சோகம் ததும்ப வண்ணம் பூசிய காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அவரது 3 குழந்தைகளுமே பிறந்த சில நாட்களில் இறந்து போனவர்கள் என்பது துயரமான செய்தி. தனது குழந்தைகள் இறந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் சோகத்தில் இருந்து மீளாத அந்த பாசத் தந்தையைப் பார்த்தபோது மனது சற்று வலித்தது.

சென்னையில் உள்ள மிகப்பெரிய கல்லறை தோட்டங் களில் ஒன்றான செயின்ட் பேட்ரிக் தோட்டத்தில் கல்லறை திருநாள் அன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 6 திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. பிற்பகல் நடக்கும் திருப்பலியை சென்னை மயிலை உயர்மறை மாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி நிறைவேற்றுகிறார். இதில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரி கள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு பங்கேற்கிறார்கள். கல்லறை திருநாள் அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, சிறப்பு வழிபாடும் நடைபெறும். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பாதிரியார்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று கல்லறைகளை மந்திரிப் பார்கள். அங்கு சிறப்பு ஜெபமும் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x