Published : 10 Nov 2016 09:10 AM
Last Updated : 10 Nov 2016 09:10 AM

ஆர்டிஓ, டிஎஸ்பி உட்பட 85 காலிப்பணியிடங்கள்: குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

29 துணை ஆட்சியர், 34 துணை காவல் கண்காணிப்பாளர் (கிரேடு-11) 8 வணிகவரி உதவி ஆணையர், ஒரு மாவட்டப் பதிவாளர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 8 மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடங்கள் என மொத்தம் 85 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி யிருக்க வேண்டும். இதற்கான முதல்நிலைத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் 32 மையங் களில் நடைபெறும். இதற்கு டிசம்பர் 8-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தேர் வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஆன்லை னில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரம், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

தேர்வுக்கட்டணத்தை, கடன் அட்டை மற்றும் பற்று அட்டை அல்லது இணையவங்கி ஆகிய முறையில் ஆன்லைனிலேயே செலுத்தலாம்.

மேலும், தேர்வுக்கட்டணத்தை இந்தியன் வங்கிக் கிளைகள், பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்துச் சீட்டின் (செலான்) மூலமாகவும் செலுத்தலாம். செலான் மூலமாக தேர்வுக்கட்டணத்தை செலுத்து வோர் ஆன்லைனில் விண்ணப் பித்த 2 நாட்களுக்குள் செலுத்தி விட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக் காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப் பிக்குமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண் ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பம் சமர்ப்பிப் பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்சினைகளோ எழுவதற்கு வாய்ப்புள்ளது.

மேற்கூறிய காரணங்களால் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது. இது குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1800-425-1002-ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x