Published : 28 Nov 2016 10:07 AM
Last Updated : 28 Nov 2016 10:07 AM

காவல்துறை இணையதளத்தில் 9 நாளில் 3,600 பேர் எஃப்ஐஆர் பதிவிறக்கம்: கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தகவல்

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை 24 மணி நேரத்தில் இணையதளத்தில் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய் யப்பட்டது. அதன்படி, கடந்த 9 நாட்களில் 3,600 பேர் சம்பந் தப்பட்ட இணையதளத்தைப் பயன் படுத்தி உள்ளனர் என கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பெண்களுக்கு எதி ரான வன்கொடுமை, தீவிரவா தம், இளம் சிறார் மற்றும் சர்ச் சைக்குரிய முக்கிய வழக்குகள் நீங்கலாக அனைத்து வழக்கு களின் முதல் தகவல் அறிக் கையை (எப்ஐஆர்) 24 மணி நேரத்துக்குள் காவல்துறை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப் பட்டது. தொலைத் தொடர்பு வசதி யில் சிரமம் உள்ள காவல் நிலையங்களில் மட்டும் காவல் நிலைய இணையத்தில் பதிவேற்றம் செய்ய 48 முதல் 72 மணி நேரம் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, http://eservices.tnpolice.gov.in என்ற தமிழ்நாடு காவல்துறை வலைதளத்தில் முதல் தகவல் அறிக்கையை பொதுமக்கள் பார்க்கலாம், பதிவிறக்கம் செய்து கொள்ள லாம் என தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், கடந்த 18-ம் தேதி மாலை அறிவித்தார்.

கடவுச்சொல் குறுஞ்செய்தி

இந்த வலைதளத்துக்குள் செல்ல விரும்புவோர், தங்களது செல்போன் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒருமுறை கடவுச் சொல் (ஓடிபி), குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்து, வலைதளத்துக்குள் செல்லலாம். அதிலிருந்து முதல் தகவல் அறிக்கையை பார்க்கவோ பதிவிறக்கம் செய்துகொள்ளவோ முடியும்.

சராசரியாக 400 பேர்

தமிழகம் முழுவதும் நேற்று வரை சம்பந்தப்பட்ட வலை தளத்தை 3,600 பேர் பார்வை யிட்டு, எஃப்ஐஆரை பதிவிறக்கம் செய்துள்ளதாக சீமா அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், தின மும் சராசரியாக 400 பேர் இந்த வலைதளத்தைப் பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x