Published : 28 Nov 2016 09:30 AM
Last Updated : 28 Nov 2016 09:30 AM

தஞ்சாவூர் மாவட்டத்தில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை உணவுத்துறை முதன்மை செயலர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தண்ணீ ரின்றி காய்ந்து வரும் சம்பா நெற் பயிரை தமிழக அரசின் உணவுத் துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. சம்பா சாகுபடிக் காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது அக்டோ பர் இறுதியில் நிறுத்தப்பட்டது. இதனால் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து கருகி வருகின் றன. இதையடுத்து, பல இடங்களில் விவசாயிகள், வயல்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசின் உணவுத்துறை முதன்மை செய லாளர் பிரதீப் யாதவ் நேற்று தஞ் சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் தண்ணீரின்றி காய்ந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயி களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது அவரிடம் விவசாயி கள் கூறியது: இதுவரை ஏக்க ருக்கு ரூ. 30 ஆயிரம் செலவு செய்துள்ளோம். தண்ணீரின்றி பயிர்கள் கருகி விட்டதால், வேறு வழியின்றி வயல்களில் மாடுகளை மேய்த்து வருகிறோம். எனவே, பயிர்க் காப்பீடு திட்டத்தை டிசம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் சாகுபடி செய்யப்படாமல் உள்ள நிலங்களையும் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து விவசாயிகள் தற் கொலை செய்வதை தடுத்து நிறுத்த, விவசாயக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர் மேலஉளூர், பருத்திக் கோட்டை, கண்ணந்தங்குடி, அவிடைநல்லூர் விஜயபுரம், தொண்டராம்பட்டு, துவரங்குறிச்சி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் காய்ந்துள்ள நெற் பயிரை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்ட வரு வாய் அலுவலர் சந்திரசேகரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சொக்கலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x