Published : 27 Oct 2016 08:28 AM
Last Updated : 27 Oct 2016 08:28 AM

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 880-க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்ததால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகை நெருங்கவுள்ள நிலையில் உள்ளூரில் தங்கத்தின் தேவை 10 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயி ரத்து 860-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயி ரத்து 850-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x