Published : 20 Oct 2016 02:30 PM
Last Updated : 20 Oct 2016 02:30 PM

புதுச்சேரியில் பருவமழையை எதிர்கொள்வது எப்படி?- கிரண் பேடி ஆலோசனை

வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இன்று (வியாழக்கிழமை) ஆலோசித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, பருவமழை காலத்தின்போது ஏற்படும் அவசர நிலைகளை சமாளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் பருவமழை வெள்ள பாதிப்பை சமாளிக்க 179 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர காவல்துறை, மின்வாரியம், வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, பொது வாணிபக் கழகம், சமூக நலத்துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பருவமழை கால அனுபவத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பொருத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இரண்டு கட்டணமில்லா தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது. 1070, 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x