Published : 18 Oct 2016 09:31 AM
Last Updated : 18 Oct 2016 09:31 AM
தீபாவளி பண்டிகையையொட்டி கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிக்பாக்கெட் திருடர்களை கண்காணிக்க ஆண், பெண் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி புது ஆடைகள், பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் தி.நகர், புரசைவாக்கம், பூக்கடை, வண்ணாரப் பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங் களில் கூடுவார்கள்.
மக்கள் நெரிசலில் சிக்காமலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், திருடர்களை கண்காணித்து பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங் கள் நடைபெறாமல் தடுக்க போலீஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொள்வார்கள். அந்த பணி இந்த ஆண்டும் தொடங்கி யுள்ளது.
முதல்கட்டமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிக காவல் உதவி மையம் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆங்காங்கே கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி யும் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கப் பட்டு வருகிறது.
தியாகராய நகர் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு 2 துணை ஆணையர்கள், 3 உதவி ஆணையர்கள், 5 இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்ஐக்கள், 80 உள்ளூர் போலீஸார், 200 ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 150 பேர், ஊர்க்காவல் படையை சேர்ந்த 100 பேர் தீபாவளி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆண்டும் இதே எண்ணிக்கையில் பாதுகாப்பு வளையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிக்பாக்கெட் திருடர்களை கண் காணிக்க ஆண், பெண் காவலர்கள் அடங் கிய தனிக்குழு (decoys) அமைக்கப்பட உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இவர்கள் பேருந்து வழித்தடங்கள், தியாகராய நகர் பேருந்து நிறுத்தம், உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெருவில் சாதாரண உடையில் கண் காணிப்பில் ஈடுபடுவார்கள். ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை சந்திப்பு, ரங்கநாதன் தெரு ரயிலடி, உஸ்மான் சாலை ஜிஆர்டி எதிரில் என 3 இடங்களில் 3 கண்காணிப்பு கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கோபுரத்தின் மேல் நின்றவாறு சுழற்சி முறையில் போலீ ஸார் தொலைநோக்கு கருவி மூலம் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர். அதேபோல் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெருவில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொலைபேசி வசதியும் செய்து கொடுக்க போலீஸ் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு புரசைவாக்கத்தில் 230 போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். 3 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் இந்த ஆண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் இதேபோன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதுகுறித்து, நுண்ணறிவு பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக் கண்ணன் கூறுகையில், “தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன் முழு விவரம் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT