Last Updated : 22 Oct, 2016 08:29 AM

 

Published : 22 Oct 2016 08:29 AM
Last Updated : 22 Oct 2016 08:29 AM

போரூர் - பூந்தமல்லி டிரங்க் சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள்: சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் திணறல்

போரூர் - பூந்தமல்லி இடையில் கனரக வாகனங்களின் அதிவேகத்தால், சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை கிண்டி அடுத்த மவுன்ட்டில் இருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் வாகனங்கள் மவுன்ட்- பூந்தமல்லி டிரங்க் சாலையை பயன்படுத்துகின்றன. இந்த சாலை அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன் சாவடி, கரையான்சாவடி உள்ளிட்ட பகுதிக ளையும் இணைக்கிறது.

பெங்களூருவில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங் கள், பேருந்துகள், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங் கள் இந்த சாலையை பெரும் பான்மையாக பயன்படுத்துகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மணல் உள்ளிட்ட கட்டிட தளவாட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும், ஆந்திராவில் இருந்து சிமென்ட் உள்ளிட்ட பொருட்களும் இந்த சாலை வழியாக சென்னைக்குள் வருகின்றன. கனரக வாகனங்கள், போரூர் இரட்டை ஏரி அருகில், சேவைச்சாலையை பயன்படுத்தி, தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக, செங்குன்றம், தாம்பரம் நோக்கி செல்கின்றன. இது தவிர, குடிநீர், கழிவுநீர் வாகனங்களும் அதிகளவில் இந்த சாலையில் பயணிக்கின்றன.

இதனால், காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை எப்போதுமே வாகனங்கள் அதிகளவில் செல் லும். இவற்றில் குறிப்பாக மணல், தண்ணீர் லாரிகள், சரக்கு ஏற்றி வரும் கனரக வாகனங்கள் அதிக வேகமாக செல்கின்றன. இதனால், சாலையை கடக்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக, அய்யப்பன் தாங்கலைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

போரூரில் இருந்து பூந்தமல்லி வரையில், இந்த சாலையில், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, அய்யப்பன்தாங்கல், மாங்காடு சாலை சந்திப்பு, கரையான் சாவடி பகுதிகளில் மட்டுமே போக்குவரத்து சிக்னல்கள் அமைந்துள்ளன. மற்ற முக்கியமான சாலை சந்திப்புகளில் இல்லை. இப்பகுதிகளில் அதிவேக மாக வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்துக்கும் காட்டுப் பாக்கம் பேருந்து நிறுத்தத்துக்கும் இடையில் மூன்று சந்திப்புகள் உள்ளன. சாலையில் தனியார் பள்ளியும் உள்ளது. அருகில் பெட்ரோல் நிலையமும் உள்ளது. இப்பகுதியில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலையை கடப்பது மிகவும் சிரமம். இந்த சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லாரி மோதியதில், ஒருவர் கால் துண்டானது. எனவே, ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முன் செட்டியார் அகரம் செல்லும் சாலை சந்திப்பு, ராமச்சந்திரா மருத்துவமனை- அய்யப்பன் தாங்கல் பேருந்து நிலையம் இடையில் உள்ள சாலை சந்திப்பு, காட்டுப்பாக்கம் செந்தூர்புரம் சாலை சந்திப்பு, பாலசுப்பிரமணியம் தெரு சந்திப்பு உள்ளிட்ட சாலை சந்திப்புகளில் பொதுமக்கள் சாலையை கடக்க காவல்துறையினர் ஏதேனும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.அதே நேரம் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, சாலை தடுப்புகள் போன்ற ஏற்பாடுகளையாவது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x