Published : 09 Aug 2022 06:58 PM
Last Updated : 09 Aug 2022 06:58 PM
சென்னை: காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் இணைந்து செயல்பட உலக வள நிறுவனத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரு நகரங்களில் காலநிலை மாற்றம், காற்று மாசு ஆகியவற்றை எதிர்கொள்ள பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியில் தேசியத் தூய்மைக் காற்று திட்டத்தில் காற்று மாசை குறைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களில் இணைந்து செயல்பட உலக வள நிறுவனத்துக்கும் (World Resources Institute) சென்னை மாநகராட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி காலநிலை மாற்ற பட்ஜெட், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான பட்ஜெட் ஆகியவற்றில் இந்த இரண்டு அமைப்புகள் இணைந்து செயல்படும். மேலும், காலநிலை மாற்றம் தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஆவணகங்களை உருவாக்கும், பயிற்சி முகாம்களை நடத்துவது ஆகியவற்றிலும் இந்த இரண்டு அமைப்புகள் இணைந்து செயல்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT