Published : 01 Aug 2022 07:24 AM
Last Updated : 01 Aug 2022 07:24 AM

திருப்பூரில் ஆக.6-ல் கம்யூ. மாநில மாநாடு தொடக்கம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் பேசினார் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். உடன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள்.படம்: ச.கார்த்திகேயன்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. இம்மாநாட்டில் முதல்வர்ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

கட்சியின் தென்சென்னை மாவட்ட 24-வது மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில்மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

கட்சியின் மாநில மாநாடு வரும்6 முதல் 9-ம் தேதி வரை திருப்பூரில் நடைபெற உள்ளது. வரும் 6-ம்தேதி மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். கூட்டணி கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கொள்கைக் கூட்டணி என்றும், இக்கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரதமர் மோடி பங்கேற்ற அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பழமைவாதத்தை போக்கவேண்டும். மாணவர்கள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும்” என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x