Published : 01 Aug 2022 06:45 AM
Last Updated : 01 Aug 2022 06:45 AM
தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக செயல்வீரர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை நாம் ஜனநாயக ரீதியாக மீட்க வேண்டும். எந்த தவறுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு மட்டும் என்றைக்குமே மன்னிப்பு கிடையாது.
ஜெயலலிதாவால் பயன்பெற்ற பலரும் சுயநலத்துக்காக வேறு பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதிமுக வியாபார நிறுவனம் போன்று மாறிவிட்டதால்தான் நாம் அமமுக என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். எழுச்சியோடு செயல்பட்டு திமுகவை அப்புறப்படுத்துவோம். மக்கள் சந்திப்பு இயக்கத்தை விரைவில் தொடங்க இருக்கிறேன். இவ்வாறு தினகரன் பேசினார்.
தேனி வந்த டிடிவி.தினகரனுக்கு ஒபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர் எஸ்பிஎம்.சையதுகான் தலைமையில் மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல. நான் தேனி வரும்போது அவர் மதுரை சென்று கொண்டிருந்தார். நீண்ட கால நண்பர். நட்பு ரீதியாகவே சந்தித்தோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT