Published : 29 Jul 2022 12:46 PM
Last Updated : 29 Jul 2022 12:46 PM

கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறியா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு

சென்னை: தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 97 சதவீத பேர் முதல் பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

கன்னியாகுமரில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை. குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.

குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பான தகவலை முறையாக பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற வெறும் ரூ.30 ஆயிரம் கட்டினால் போதும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x