Published : 29 Sep 2016 02:39 PM
Last Updated : 29 Sep 2016 02:39 PM

காங்கிரஸ் உட்பட கூட்டணிக்கு 10 வார்டுகள்: மதுரை மாநகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல் தயார்

மதுரை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் போட்டியிடும் வார்டுகள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திமுக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. கட்சித் தலைமை அறிவிக்கும் முன்னரே, பல வார்டுகளில் திமுகவினர் தேர்தல் பணியை நேற்றே தொடங்கினர்.

மதுரை மாநகராட்சியில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, மனுத்தாக்கலும் செய்துள்ளனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் விவரங்களை நேற்றுவரை வெளியிடவில்லை. திமுக சார்பில் விருப்ப மனுக்களை அளித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். வார்டு செயலாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் வேட்பாளர்களை தேர்வு செய்தனர். காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் மட்டும் கூட்டணி குறித்து பேசி, அந்தந்த பகுதி நிர்வாகிகளே முடிவு செய்து கொள்ள கட்சி தலைமை அறிவுறுத்தியது.

இதையடுத்து நேற்று மதுரை நகர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயனுடன் திமுக மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, வேலுச்சாமி, எம்எல்ஏ பி.டி.ஆர்.பி.தியாகராஜன், முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு ஆகியோர் அடங்கிய குழுவினர் பேச்சு நடத்தினர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்பி விஸ்வநாதன், தெய்வநாயகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ‘மதுரை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 6, மற்ற கட்சிகளுக்கு 4 வார்டுகள் என அதிகபட்சம் 10 வார்டுகள் கூட்டணிக்கு ஒதுக்கப்படுகிறது. திமுக வேட்பாளர் பட்டியல் ஏற்கெனவே தயாராக உள்ளது. அதிமுகவின் போட்டியை சமாளித்து வெற்றிபெற வாய்ப்புள்ளவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்துள் ளோம். கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப் படும் வார்டுகளை தவிர்த்து இதர வார்டுகளின் பட்டியல் கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டோம். செப். 29-ல் அதிகாரபூர்வமாக பட்டியலை கட்சி தலைமை அறிவிக்கும். அதன்பின் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள். இதற்காக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் சென்னை புறப்பட்டனர்’ என்றார்.

தேர்தல் பணிகளை துவக்கிய திமுகவினர்

பல வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் என்ற தகவல் வெளியானது. நிர்வாகிகள் அளித்த உறுதியின்படி நேற்றே பணிகளை துவக்கினர். வார்டில் உள்ள பிரமுகர்கள், கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினர். வார்டு 28-அனிதா,29-ல் துரைப்பாண்டி, 32-ல் குமரன், 25-ல் ராதிகா, 24-ல் சாரதா, 48-செந்தில்குமார், 3-ல் நந்தினி ஆகியோர் திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது உறுதி என தகவல் தெரிவித்ததால் நேற்றுமுதல் இந்த பகுதிகளில் தேர்தல் பணி தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x