Published : 13 Jun 2014 04:50 PM
Last Updated : 13 Jun 2014 04:50 PM

பொறியியல் கலந்தாய்வு: மாணவர்களுக்கு இரு வழி பயணக் கட்டணச் சலுகை

பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்காக, சென்னை வரும் மாணவர்களுக்கான இருவழி பயண போக்குவரத்துக் கட்டணச் சலுகையை தொழில்நுட்ப கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொழில் நுட்பக் கல்வி ஆணையர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், '2014-2015-ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பொறியியற் மாணவர் சேர்க்கைக்கு சென்னை, அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு வெளியூரிலிருந்து (சென்னை மாவட்டம் நீங்கலாக) சென்னை வரும் மாணவர் மற்றும் அவருடன் உதவிக்காக வரும் ஒரு நபருக்கு (1+1) அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 50% இருவழி பயணக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்தச் சலுகையினைப் பெற சென்னை, அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் மாணவ / மாணவிகள் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தின் (Counselling Call Letter) ஒளி நகலை ((Xerox copy) சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகங்களின் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒளி நகலை பெற்றுக் கொண்ட அலுவலர்கள் 50% கட்டணச் சலுகை வழங்கப்பட்டதென அழைப்புக் கடிதத்தின் முன்பக்கத்தில் சான்றளித்த பின்பு தக்க பயணச் சீட்டுகளை 1+1 மாணவர்களுக்கு வழங்குவர். இதே நடைமுறை கலந்தாய்வினை முடித்து ஊருக்கு திரும்ப செல்வதற்கும் பொருந்தும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x