Published : 01 May 2016 09:50 AM
Last Updated : 01 May 2016 09:50 AM

முன்னாள் அமைச்சர் பிரச்சாரத்தில் அதிமுகவினர் மோதல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி அருகே வடகாட்டில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதால், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால், திமுகவி லிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ். இதனிடையே அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவதூறாகப் பேசியதாக கூறப் படும் விவகாரத்தில் அதிமுகவுக் கும் முத்தரையர் சமுதாயத் தினருக்கும் இடையே முரண் பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இதனால் முத்தரையர் சமூகத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில் அதிமுக வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் செய்யு மாறு செல்வராஜுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவரது பெயர் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள் ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கொத்தமங்கலத்தில் நேற்று வாகனம் மூலம் செல்வராஜ் பிரச்சாரம் செய்தார். பின்னர், வடகாட்டில் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் ஞான.கலைச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது, தனது ஊரில் பிரச்சாரம் நடப்பது குறித்து தனக்கு ஏன் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் அ.வெங்கடாசலத்தின் மகன் ராஜபாண்டியன், அதிமுக ஒன்றியச் செயலாளர் துரை தனசேகரனிடம் முறையிட்டுள் ளார். அதற்கு அவரும் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், அங்கிருந்த துரைதனசேகரனின் மகன் விமல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ராஜபாண்டியன், ஊராட்சி துணைத் தலைவர் சி.சாத்தையா ஆகியோரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட செல்வராஜுக்கு எதிராக சிலர் கோஷமிட்டனர்.

இதைத்தொடர்ந்து, செல்வ ராஜ் உள்ளிட்டோரின் வாகனங் கள் அங்கிருந்து செல்ல முடியாதபடி அதிமுகவினர் சுற்றிவளைத்து, தகராறில் ஈடுபட்டனர். பின்னர், இரு தரப் பினரையும் போலீஸார் சமா தானம் செய்ததுடன், தகராறில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால், பிரச்சாரம் பாதியிலேயே நிறுத்தப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x