Published : 16 Jul 2022 07:20 AM
Last Updated : 16 Jul 2022 07:20 AM

திமுகவினர் ஒரே அணியாக செயல்பட வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

உத்திரமேரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின்.

உத்திரமேரூர்: திமுகவில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என பல்வேறு அணிகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்று இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உத்திரமேரூர் அருகே ஆர்.எம்.கண்டிகை கிராமத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் க.சுந்தர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசியது:

நமது கட்சியில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என பல அணிகள் இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் ஒரே அணி. தந்தை பெரியார் அணி. பேரறிஞர் அண்ணா அணி, கலைஞர் அணி, நம் தலைவர் அணி என்ற வகையில் நமது பயணம் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் பலர் என்னிடம் மனுக்களை அளிக்கின்றனர். அந்த மனுக்களை முதலமைச்சரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல்மாலிக் வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் ஞானசேகரன், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x