Published : 07 Jul 2022 06:49 AM
Last Updated : 07 Jul 2022 06:49 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 2022-23-ம் ஆண்டுபட்ஜெட்டின் அளவை இறுதி செய்வது குறித்து தலைமைச்செயல கத்தில் விரிவான விவாதம் நடந்தது. தற்போதைய நிலையில், ரூ. 11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டை வரும் ஆகஸ்ட்டில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
புதுவை சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச்சில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் முழுமை யான பட்ஜெட் தாக்கல் செய்யப் படுகிறது. கடந்த மார்ச் மாதமும் 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டையே முதல்வர் ரங்க சாமி தாக்கல் செய்தார்.
முழுமையான பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் தலைமைசெயலக கருத்தரங்கு அறையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆளுநர் தமிழிசை தலைமை வகித்தார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் ஜெ. சரவணன்குமார், எம்பிக்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எதிர்கட்சித்தலைவர் சிவா, தலைமை செயலர் ராஜீவ்சர்மா, அரசு செயலர்கள், உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆளுநர் கருத்து
3 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "புதுச்சேரியில் அனைத்து துறைஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிக ளுடன் பட்ஜெட் தொடர்பான ஆரோக்கியமான விவாதம் நடை பெற்றது. எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
அனைத்து துறைகளிலும் தேவை யான நிதி ஒதுக்கப்பட்டு, வருகிறசட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது ஒரு நல்ல பட்ஜெட் ஆக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித் தபோது, "கடந்த நிதியாண்டு ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரியது. மத்திய அரசு ரூ.9 ஆயிரத்து 924 கோடிக்கு அனுமதியளித்தது.
தற்போது ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டத்தில் விவாதித்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இறுதி செய்யப்படும் தொகையை மத்திய அரசுக்கு அனுப்புவார்கள். அங்கு அனுமதி கிடைத்தவுடன் புதுச்சேரி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கலாக வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டனர்.
ஆளுங்கட்சி தரப்பில் விசாரித்த போது, "மத்திய அரசின் நிதியுதவி கூடுதலாக தேவை. நடப்பாண்டில் குறைந்தப்பட்சம் ரூ. 2 ஆயிரம் கோடிகள் கூடுதலாகத் தேவை. நடப்பாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிக்கப்படா விட்டால், கடந் தாண்டை விட ரூ. 150 கோடி வரை குறைவாகதான் மத்திய அரசு நிதி உதவி கிடைக்கும். அதனால் கூடுதல் நிதி உதவி தேவை என்று கடந்த ஏப்ரலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதல்வர் மனு அளித்துள்ளார்.
தற்போது மத்திய அரசின் நிதி அனுமதியை வைத்துதான் பட்ஜெட் அளவை இறுதி செய்ய முடியும்" என்று குறிப்பிட்டனர்.
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைத்து முதல்வர் ரங்கசாமி ஆட்சியமைத்து ஓராண்டை கடந்த நிலையிலும் இதுவரை டெல்லி சென்று பிரதமர் மோடியைமரியாதை நிமித்தமாக சந்திக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT