Published : 13 May 2016 08:42 AM
Last Updated : 13 May 2016 08:42 AM

திராவிடக் கட்சிகள் ஆட்சியில் வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று வீரமுழக்கம் எழுப்பிய திராவிடக் கட்சிகளால் இன்றுவரை ஏழையை சிரிக்க வைக்க முடியவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் பரிசுப் பையுடன் ரூ.100 கொடுத்தும் செயற்கையாகக்கூட ஏழைகளை சிரிக்க வைக்க தமிழக அரசால் முடியவில்லை.

தமிழகத்தில் 1.92 கோடி குடும்பங்களுக்கு இலவச அரிசி, இலவச பொங்கல் பரிசு, இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்படுகின்றன. அதாவது 96 சதவீத குடும்பங்களை இலவச அரிசி வாங்கித்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையில் வைத்திருப்பதுதான் திராவிடக் கட்சிகளின் சாதனை என்பதை மக்கள் உணர வேண்டும். வறுமை யை ஒழிக்க வேண்டுமானால் தொழில் உற்பத்தியை பெருக்கி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். ஆனால், இதை செய்ய ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்.

10 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசின் கடன் ரூ.54 ஆயிரம் கோடி. ஆனால், இப்போது தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.2.47 லட்சம் கோடி, பொதுத்துறை நிறுவனங் களின் கடன் ரூ.2.01 லட்சம் கோடி என மொத்த கடன் ரூ.4.48 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பயனற்ற இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறிகளாக மாற்றி யதன் விளைவு தான் வறுமையும், வளர்ச்சியின்மையும் என்பதை பாமக உணர்ந்திருக்கிறது. அத னால்தான் வளர்ச்சிக்கு வித்திடும் கல்வி, மருத்துவம், விவசாயத்துக் கான இடுபொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என பாமக அறிவித்துள்ளது.

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மேம்படுத்த விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். ஆற்று மணல், தாது மணல், கிரானைட் ஆகியவற் றின் விற்பனையை முறைப்படுத் துதல், வரி சீர்திருத்தம் மூலம் வருவாயை அதிகரித்தல், ஊழலை ஒழித்தல், அரசின் செலவுகளை குறைத்தல் ஆகியவற்றின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாயை ஏற்ப டுத்த முடியும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x