Published : 20 May 2016 09:28 AM
Last Updated : 20 May 2016 09:28 AM

திமுகவுக்கு கை கொடுத்த சென்னை மாவட்டம்: 16-ல் 10 தொகுதிகளை கைப்பற்றியது

சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கைப்பற்றி யுள்ளது.

எம்ஜிஆர் காலத்திலேயே பல தேர்தல்களில் தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெற்றபோதும், சென்னை மாவட்டம் மட்டும் தொடர்ந்து திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்தது. அதிமுக தலைமைப் பொறுப்புக்கு ஜெயல லிதா வந்தபிறகு, சென்னையில் திமுகவின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தது. கடந்த 2011 தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் கொளத்தூர், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே திமுகவால் வெற்றி பெற முடிந்தது. இந்நிலையில், தற்போதைய தேர்தலில் சென்னை மாவட்டத்தில் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 16 தொகுதிகளில் கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், சைதாப் பேட்டை, வேளச்சேரி ஆகிய 10 தொகுதிகளை திமுக கைப்பற்றி யுள்ளது. அதிமுகவுக்கு ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம், மயிலாப்பூர், விருகம் பாக்கம், தியாகராயநகர் ஆகிய 6 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x