Published : 10 May 2016 12:32 PM
Last Updated : 10 May 2016 12:32 PM

தேர்தல் அறிக்கையால் அதிமுக செல்வாக்கில் மேலும் வீழ்ச்சி: அன்புமணி

அதிமுக-வின் தேர்தல் அறிக்கை அந்தக் கட்சியின் செல்வாக்கை மேலும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ள பாமக வேட்பாளர் அன்பு மணி ராமதாஸ் மடம் கிராமத்தில் தங்கியுள்ளார். அங்கு நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த 26 ஆண்டுகளாக பாமக மேற்கொண்ட உழைப்பு, பணிகள் ஆகியவற்றால் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் மத்தியில் விருப்பம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாமக-வினர் களத்தில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஆனால், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் களத்தில் இல்லை. காரணம், அவர்கள் பணத்தை நம்புகின்றனர்.

யாருக்கெல்லாம் பணம் கொடுத்து வாக்குகளை வளைக்கலாம் என கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக ஒரு வாக்குக்கு ரூ.500, அதிமுக ரூ.1000 கொடுக்க தயாராகி விட்டனர். தோல்வி பயத்தில் இது போன்ற நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கள நிலவரம் இப்படியிருக்க சில ஊடகங்கள் திமுக, அதிமுக-வுக்குச் சாதகமாக கருத்துக் கணிப்பு வெளி யிட்டு வருகின்றனர். திணிப்புகளாக வெளியிடப்படும் இந்த கருத்துக் கணிப்புகள் பொய்யாகி விட்டால் சம்பந்தப்பட்ட ஊடகத் துறையினர் தங்கள் நிறுவனங்களை மூடி விடத் தயாரா? வாக்குப்பதிவு முடியும் அன்று கூட கருத்துக் கணிப்பு மேற்கொள்ள லாம். தற்போது கருத்துக் கணிப்பு மேற்கொள்ளவும், வெளியிடவும் அவசியம் என்ன வந்தது?

பண விநியோகம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து புகார் அளித்தாலும் பெயரளவுக்குத் தான் நடவடிக்கை உள்ளது. இருப்பினும் நடுநிலை வாக்காளர்களும், இளைஞர் களும் இரு திராவிடக் கட்சிகளையும் விரும்பவில்லை. மாறாக அவர்களின் வாக்குகள் பாமக-வுக்குத் தான் கிடைக் கப்போகிறது. பாமக-வுக்கு சாதகமான மவுன அலை தமிழகத்தில் நிலவுகிறது.

ஜெயலலிதா அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை உயர்மட்ட அதிகாரிகள் சிலரைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறி வருகிறார். இவ்வாறு முதல்வர் கூறியிருப்பதே விதிமீறல் தான். அவர் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையால் தமிழகத்தின் கடன் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். அதிமுக-வின் தேர்தல் அறிக்கை அந்தக் கட்சியின் செல்வாக்கை மேலும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் தான் தமிழகம் வளர்ச்சியடைந்ததாகக் கருணாநிதி கூறி வருகிறார். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்திற்கு பிறகு தொழில் வளர்ச்சி, நீர் பாசனத் திட்டங்கள் என எதுவுமே வரவில்லை. கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் என மூன்று ‘சி’ இனி திமுக ஆட்சியில் இருக்காது என்று மேடைக்கு மேடை ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், அறிவியல் ரீதியாக ஊழல் செய்த கட்சி என பெயரெடுத்த கட்சி திமுக தான் என்பதை ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x