Published : 24 Jun 2022 06:15 AM
Last Updated : 24 Jun 2022 06:15 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவ லகத்தில், சிசு மற்றும் தாய் உயிரிழப்புத் தடுப்பு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த மார்ச் முதல் மே வரை 3 மாதங் களில் 17 சிசுக்கள் மரணம், 1 மகப்பேறு மரணம் நடைபெற்றது. இதுதொடர்பாக ஆட்சியர் பி.என்.தர் தலைமையில், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சிசு மரணம் குறித்து ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தனர். இவ்வாய்வறிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: மாவட்டத்தில் சிசு மரணம் மற்றும் மகப்பேறு மரணம் முற்றிலும் தவிர்க்கப்படுவதற்கு, மருத்துவ அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கர்ப்பிணி பெண்கள் மீது தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
மகப்பேறுக்கு பிறகுபச்சிளம் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று ஏற்படாதவாறு மருத்துவர்கள் சிறப்பாக மருத்துவப்பணியை மேற்கொள்ளவேண்டும்.
பொதுமக்கள் மகப்பேறுக்கு அரசு மருத்துவமனை களை அணுக வேண்டும்.
சட்டப் பூர்வமற்ற இடங்களில் கருக்கலைப்பு மேற்கொள்ளக்கூடாது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் உரிய ஆலோசனையின்படி கருக்கலைப்பு மேற்கொள்ள வேண்டும்.
அரசின் விதிமுறைகளை மீறி கருக்கலைப்புகளில் ஈடுபடும் மருந்தகங்கள், தனியார் மருத்துவ மனைகள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பி.பாலச்சந்தர், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT