Published : 24 Jun 2022 06:14 AM
Last Updated : 24 Jun 2022 06:14 AM
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு ஏ பிளஸ் (A ) தரச்சான்றை தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமான அண்ணாமலை பல்கலைக் கழகம்தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்தினால் நான்காவது முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 4-க்கு 3.38 மதிப்பெண்களுடன் ஏ பிளஸ் (A ) தரச்சான்று பெற்றுள்ளது.
இதுதொடர்பாக இம்மாதம் 15 முதல் 17 வரை இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நாகேஸ்வரராவ் தலைமையிலான குழுவினர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் அசாம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் கந்தர்ப்ப குமார் தேகா தலைமையிலான குழு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு, தன்னுடைய அறிக்கையினை தேசிய தர மதிப்பீட்டுக் குழுவிற்கு சமர்ப்பித்திருந்தது.
ஆனால் தரமதிப்பீடு முடிவு வெளியிடப்படாமல் மீண்டும் ஒரு குழு ஆய்வு செய்யும் என தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி 2 -வது முறை குழு ஆய்வு செய்து தரச் சான்று வாங்கியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராமகதிரேசன் கூறுகையில் , "இத்தரச்சான்றானது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். இதற்கு முன்னர் பெற்றிருந்த ஏ பிளஸ் (3.09) தர சான்றுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இவ்வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கிய மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT