Published : 03 May 2016 09:51 AM
Last Updated : 03 May 2016 09:51 AM

`அப்புறம் வருத்தப்படாதீங்க’- இமான் அண்ணாச்சி ருசிகரம்

திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் நேற்று பாளையங்கோட்டை, திருநெல்வேலி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

`சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க.. திமுகவுக்கு ஓட்டுப்போடுங்க.. உதயசூரியனை மறந்துராதீங்க.. அப்புறம் வருத்தப்படாதீங்க’ என்று டிவி நிகழ்ச்சியில் பேசுவதைப் போல பேசி பிரச்சாரம் செய்தார். மேலும் அவர் பேசும்போது, ‘அதிமுக ஆட்சியை அகற்றணும்னு மக்கள் முடிவு செஞ்சிட்டாவ. தேர்தல் அறிக்கையில் இருக்குற வாக்குறுதிகளை திமுக நிறைவேத்தும். திமுகவுக்கு ஆதரவு குடுங்க’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x