Published : 04 May 2016 02:22 PM
Last Updated : 04 May 2016 02:22 PM

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் வளர்ச்சி பெறவில்லை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டினார்.

வாணியம்பாடி தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிடும் ஞானசேகரனை ஆதரித்து நேற்று அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

13 தொகுதிகளைக் கொண்டது வேலூர் மாவட்டம். வேலூர் தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றவர் ஞானசேகரன். அவர் எம்எல்ஏவாக இருந்தபோது பல்வேறு திட்டங்களை வேலூர் தொகுதிக்கு போராடி பெற்று தந்துள்ளார். எனவே, அவரது சொந்த ஊரான வாணியம்பாடி தொகுதியை மேம்படுத்த, 13 தொகுதிகளில் முன்னோடி தொகுதி யாக வாணியம்பாடியை மாற்ற ஞானசேகரன் போட்டியிடுகிறார்.

வாணியம்பாடி தொகுதியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைத்த உடன் சரி செய்யப்படும். விவசாயக் கடன், கல்வி கடன் ரத்து, பூரண மதுவிலக்கு, ஜல்லிக்கட்டு மீதான தடை, பாலாற்றின் மீது ஆந்திரா அரசு அணைக்கட்ட முயற்சி, தேமுதிக ஆட்சியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசு கொள்முதல் செய்வது, பல நலத் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி தமிழகத்தை தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியை ஆளும். தமிழகத்தின் பெரிய மாவட்டமாக வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக் காக பிரிக்கப்படும். வாணியம் பாடியை தலைமையிடமாகக் கொண்டு தேமுதிக ஆட்சியில் புதிய மாவட்டம் கொண்டு வரப்படும். கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x