Published : 13 May 2016 02:38 PM
Last Updated : 13 May 2016 02:38 PM

அதிமுக பணம் பட்டுவாடா செய்ய தொடங்கிவிட்டது: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும். விவசாயக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மின்கட்டணம், பால்விலை உயர்வு மற்றும் அத்தி யாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு ஜெயலலிதா அரசுதான் காரணம். மழை வெள்ளத்தின்போது ஜெயலலிதா மக்களை சந்திக்காமல், தற்போது தேர்தலுக்காக சந்திப்பதால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

மேலும் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அதிமுக பணம் பட்டுவாடா செய்ய தொடங்கிவிட்டது. தோல்வி பயத்தால் தற்போது ஜெயலலிதா சென்னையைச் சுற்றி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த ஆட்சியில் வன் முறை தலை விரித் தாடுகிறது. சென்னை அம்பத்தூரில் போட்டி யிடும் எங்கள் வேட்பாளர் மீது யாரோ சில வன் முறையாளர்கள் ஆசிட் வீச முயற்சித்துள்ளனர். அவர் உயிர் பிழைத்து ஓடிவந்துள்ளார். பல்வேறு தொகுதிகளில் அமைச்சர்களே ஓட்டு கேட்க செல்ல முடிவ தில்லை.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ராகுல் தமிழக பிரச்சாரத்துக்கு வரமாட்டார். புதுச்சேரியில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியமைக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x